தேங்காயில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோயினுடன் 5 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

தேங்காயில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோயினுடன் 5 பேர் கைது

தேங்காயில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; ஐவர் கைது-Heroin Inside Coconut-5 Suspects Arrested
மிகவும் சூட்சுமான முறையில் தேங்காயினுள் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 500 கிராம் ஹெரோயினுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ வெளியேறும் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து மொரகஹஹேன பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்கள் இருவர் அடங்குகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad