கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 520 கிலோ கிராம் மஞ்சளுடன் மூவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 520 கிலோ கிராம் மஞ்சளுடன் மூவர் கைது

மன்னார், முந்தலம்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட சுமார் 520 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேகநபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்தி கடற்படை கட்டளை பிரிவினரால் மன்னார், முந்தலம்பிட்டி கடற்கரை பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 12 உரப்பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 முதல் 55 வயதுடையவர்கள் என்பதோடு, குறித்த சந்தேகநபர்கள் அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள், படகு என்பன கிருமி அழிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று (16) சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 818 கிலோ கிராம் மஞ்சளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad