20 ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் - பியல் நிஷாந்த - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

20 ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் - பியல் நிஷாந்த

(இராஜதுரை ஹஷான்) 

உயர் நீதிமன்றம் வழங்கும் ஆலோசனையை முழுமையாக செயற்படுத்தி 20 ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என ஆரம்பக் கல்வி மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். 

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஜனாதிபதி சர்வாதிகார போக்கிற்கு செல்வதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். 20 ஆவது திருத்தத்தில் புதிதாக எவ்வித விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. 

ஜனாதிபதியும், அரசாங்கமும் சுமுகமான முறையில் செயற்படுவதற்கான சூழ்நிலை மாத்திரமே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

20 ஆவது திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் புதுமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆளும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவார்கள். 

உயர் நீதிமன்றம் வர்த்தமானியில் வெளியாகியுள்ள 20 ஆவது திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் வழங்கும் சட்ட ஆலோசனைகளை முழுமையாக செயற்படுத்தி திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad