13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை கூட்டத்தின் போது 13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய சபை அமர்வின் போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நா. திருநாவுக்கரசு 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்தார். அதனையடுத்து, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ந.ராமசந்திரன் சபையில் இதனை வழிமொழிந்தார்.

பின்னர், 13 ஆவது திருத்த சட்டத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய சபை அமர்வில் 30 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad