மூன்று DIG உள்ளிட்ட 21 பொலிஸாருக்கு இடமாற்றம் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

மூன்று DIG உள்ளிட்ட 21 பொலிஸாருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர், பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்ஒருவர், 10 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 06 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கேகாலை மாவட்ட பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பதில் பொலிஸ்மா அதிபர் ஏ.எச்.எம்.டபிள்யூ.சீ. அழககோன், கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, குருணாகல் மாவட்ட பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.எம்.பீ. சிறிவர்தன, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ்மா அதிபரின் அலுவலக பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் அலுவலக பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் டீ.பீ. சந்திரசிறி, கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad