வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதை மாத்திரைகள், கேளரா கஞ்சா, ஹெரோயினுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதை மாத்திரைகள், கேளரா கஞ்சா, ஹெரோயினுடன் ஒருவர் கைது

1538 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது | Tamil Page
எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம். தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம். துசிதகுமார தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான ஜி.ஐ. புஸ்பகுமார, எஸ். வாசல, எம்.பி.எம். தாஹா ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது பாலைநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த இளைஞனிடம் இருந்து 1,538 போதை மாத்திரைகள், 2000 மில்லி கிராம் கேளரா கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுளவின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1538 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது | Tamil Page

No comments:

Post a Comment

Post Bottom Ad