ஜோன்ஸ்டனின் கோரிக்கைக்கு அமைய மைத்திரிக்கு அரசாங்க தரப்பு வழங்கிய கௌரவம் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

ஜோன்ஸ்டனின் கோரிக்கைக்கு அமைய மைத்திரிக்கு அரசாங்க தரப்பு வழங்கிய கௌரவம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கமைய இந்த ஆசனம் மைத்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிக்காக ஆளும் கட்சி பக்கத்தில் நான்காவது வரிசையில் முதலாவது ஆசனமே வழங்கப்பட்டிருந்தது.

இதுவரையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் நான்காவது வரிசையின் முதலாவது ஆசனமே வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் கோரிக்கைக்கமைய இவ்வாறு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad