'சமயங்' குழுவின் முக்கிய உறுப்பினர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

'சமயங்' குழுவின் முக்கிய உறுப்பினர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பாதாள உலக குழு உறுப்பினர் 'இந்ர' சுட்டுக் கொலை - Ibctamil
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் முன்னாள் 'சமயங்' என்பவரின் குழுவின் துப்பாக்கி சுடும் நபர் என அறியப்படும் இந்திரா என அழைக்கப்படும் இந்துனில் வஜிர குமார என்பவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்தபோது, அவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (28) நவகமுவ பிரதேசத்தில் வைத்து இவ்வாறு பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad