புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி

புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி!
கொழும்பு மருதானை பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு பொகவந்தலாவ, சீனாகலை தோட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (27) மாலை வேலையில் இடம்பெற்றதாகவும் மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் பொகவந்தலாவ, சீனாகலை தோட்டத்தை சேர்ந்த 24 வயதுடைய செல்வராஜ் கஜேந்திரன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் கொழும்பு பகுதியில் உள்ள புத்தக நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக, இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad