வவுனியா நகர் முழுவதும் பொலிஸார் சோதனை நடவடிக்கை! - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

வவுனியா நகர் முழுவதும் பொலிஸார் சோதனை நடவடிக்கை!

வவுனியாவில் தொடரும் சோதனை நடவடிக்கை: அச்சத்தில் மக்கள் (2ஆம் இணைப்பு) |  Athavan News
வவுனியா நகர் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா பொலிஸார் இன்று (31) காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

"போதைப் பொருள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்" எனும் எண்ணக்கருவில் வவுனியா பொலிஸாரினால் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலை சுற்றுவட்ட சூழல், வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுமலசல கூடங்கள், சந்தைகள், களஞ்சியசாலைகள் போன்றவற்றை மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையில் 20 க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் சந்தேகத்திடமான நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்தனர்.

பொலிஸாரின் இவ் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமையுடன் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கும் வவுனியா பொலிஸாரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

வவுனியா தீபன்
வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது பொலிஸார் தீவிர சோதனை  - Jvpnews

No comments:

Post a Comment

Post Bottom Ad