தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்! | Athavan  News
இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் சிறைகளில் தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "விடுதலை செய் விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய்", "வன ஜீவராசிகள் திணைக்கள ஆக்கிரமிப்பை எதிர்ப்பது பயங்கரவாதமா?", "கஞ்சா கடத்தலை தடுக்க முற்பட்ட உதயசிவம் பயங்கரவாதியா?" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad