அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து அமைதிக்கும் அபிவிருத்திக்குமாகச் செயற்படக் கூடிய புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவேன் - மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 9, 2020

அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து அமைதிக்கும் அபிவிருத்திக்குமாகச் செயற்படக் கூடிய புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவேன் - மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

நஸீர் அஹமட் எடுக்கவுள்ள, சிறந்த ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதமில்லாமல் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து அமைதிக்கும் அபிவிருத்திக்குமாகச் செயற்படக் கூடிய புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போது தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இஸற். ஏ. நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய நிலையில் தனது எதிர்கால சேவைகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான தனது பிரார்த்தனை உரையை ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 07.08.2020 அவர் நிகழ்த்தினார்.

அவர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பிரார்த்தனையின் பின்னர் தொடர்ந்து உரையாற்றுகையில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக் காலத்தில் எனது அபிவிருத்திச் சேவைகள் திட்டமிட்ட வகையில் முழு வீச்சில் இடம்பெறும் என்ற சுபசோபனமான செய்தியை இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து சமூக மக்களுக்கும் அறியத் தருகின்றேன்.

எனது சேவைகள் எனக்கு வாக்களித்த மக்கள் என்றோ முஸ்லிம் சமூகம் என்றோ குறுகிய வரையறைக்குள் ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

என்னை ஆதரித்த மக்களும் என்னை நிராகரித்த மக்களும் என தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களிலுள்ள அனைத்து மக்களும் எனது சேவைகளால் நன்மை பெறுவார்கள்.

இதனை கடந்த கால எனது தனிப்பட்ட சேவையிலும் மாகாண முதலமைச்சராகவும் அம்மாகாண சபையின் அமைச்சராகவும் இருந்த காலத்தில் நான் ஆற்றிய சேவைகளே ஆதாரமாக அமைந்திருக்கின்றன.

ஆகையினால் இந்த மாவட்டத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களுக்கான ஒரு சேவகனாகவும் அவர்களது நலன்காக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதியாகவும் நான் இருந்து பணியாற்றுவேன்.

அதேநேரம், இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் கடந்து நான் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் மீட்சிக்காகவும் பணியாற்றுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து சமூக மக்களுக்கும் நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

மேலும் சிறுபான்மை இனங்களை அதிக ஆதரவுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து சமயோசிதமாக ஒட்டுமொத்த சிறுபான்யினரின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் இவ்விடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஒட்டு மொத்த சிறுபான்மை அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்கும் அபிவிருத்தி மாற்றதத்தைக் கொண்டு வருவதற்கும் இணக்கப்பாடான அரசியல் நகர்வு முக்கியமாகும்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றப் பிரததிநிதிகாளகச் செயற்பட்ட பல அரசியல்வாதிகள் முரண்பாட்டு அரசியலைச் செய்து பாரிய இழப்புக்களைச் கொண்டு வந்திருக்கின்றனர் என்பதை நாம் நினைவிற் கொண்டு எதிரகாலத்தில் செயலாற்ற கற்றுக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் பொது விடயங்களில் கூட இணக்கப்பாடு பபன்டாதவிடத்து சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிம் சமூகங்கள் எதனையுமே சாதிக்க முடியாமல் போய் விடும்.” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad