சகல இன மக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் வியாழேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

சகல இன மக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் வியாழேந்திரன்

இந்நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எதிர்பார்ப்பாகும். இந்த வகையில் பாகுபாடற்ற சமமான சேவையை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தபால் திணைக்களத்தின் விசேட நிகழ்வில் சிறப்புரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று இன, மத வேறுபாடுகள் இன்றி சுமார் 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

சில தினங்களில் வறுமையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண சித்தி பெறாத இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஏற்பாடுகளை செய்துள்ளார் என்றார்.

மலையகப் பகுதி மக்கள் தொழில் நேர்முகப் பரீட்சைகளின் கடிதங்கள் மற்றும் அவசர தபால் சார்ந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள எதிர்நோக்கும் கடும் அசௌகரியங்களை போக்க விரைவில் அப்பிரதேசத்துக்கு கள விஜயம் மேற்கொண்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad