தேசியப்பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் : செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

தேசியப்பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் : செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம்

தேசிய பட்டியலில் ஞானசார தேரரின் ...
(இராஜதுரை ஹஷான்)

எங்கள் மக்கள் சக்தி கட்சி (அபே ஜன பல பக்ஷ) கட்சியின் தேசியப்பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஒரு ஆசனத்தை பயனுடையதாக உபயோகிக்க வேண்டும் என கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இக்கட்சி மொனராகலை, கொழும்பு, குருநாகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்டு 67,758 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் இக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

தேசியப்பட்டியலில் ஞானசார தேரரின் பெயரை உள்ளடக்குவதற்கு அக்கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தை எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சி பல மாவட்டங்களில் 3 அல்லது 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. எனவே இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad