ஜப்பான் பிரதமரின் உடல் ஆரோக்கியத்துக்கு பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

ஜப்பான் பிரதமரின் உடல் ஆரோக்கியத்துக்கு பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

இலங்கை – பக்கம் 57
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல் ஆரோக்கியத்துக்கு பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மஹிந்த அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், எனது அன்பான நண்பர் ஷின்சோ அபேக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உடல் நிலை சோர்வு காரணமாக ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்து நீங்கள் இராஜினாமா செய்வதனால் உங்கள் ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கையுடன் உங்கள் நட்பு எங்கள் இரு நாடுகளுக்கிடையிலான உறவை முன்னெப்போதையும் விட வலுவாக இருக்க வழிவகுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad