என் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர் மஹிந்த - News View

Breaking

Post Top Ad

Sunday, August 9, 2020

என் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர் மஹிந்த

நான்காவது முறையாகவும் பிரதமராக ...
என் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினால் நான் தாழ்மையுடன் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பின்னர், அது தொடர்பில் தனது டுவிட்டரில் பதவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், என் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பால் நான் தாழ்மையுடன் இருக்கிறேன். இலங்கையர்கள் எனக்கு கொடுக்கும் நம்பிக்கை, எனது தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்யத் தூண்டுகிறது.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முற்போக்கான பயணத்தை மேற்கொள்ளும் என்பதை நான் உறுதி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad