மரம் சரிந்து விழுந்ததில் இருவர் பலி - முல்லைத்தீவில் சம்பவம்! - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

மரம் சரிந்து விழுந்ததில் இருவர் பலி - முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவில் திடீரென காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர்.

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜயேந்திரன் வயது (33) என்ற, கொக்குத் தொடுவாய்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றுமொருவரான, அரியராசா எமில்டன் வயது (21) என்ற நீராவிப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் படுகாயமடைந்ததையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad