பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான் அரசு - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான் அரசு

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் நிராகரித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 150 பேர் பலியாகினர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த வெடி விபத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். 

அதேபோல், லெபனானுக்கு பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனும் சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் இதனை வலியுறுத்தியது.

இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் நிராகரித்தார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் “அமைச்சகம் இது தொடர்பான விசாரணையை ஏற்கனவே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை” என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad