இலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள்

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள். #கொழும்பு - Madawala News Number 1 Tamil  website from Srilanka
கொழும்பு டி சொய்சா மகளிர் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள் பிறந்துள்ளன.

இன்று (28) முற்பகல் இக்குழந்தைகள் பிறந்துள்ளதாக, வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், வைத்தியர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார். 

இவ்வாறு பிறந்துள்ள 05 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதோடு, அக்குழந்தைகள் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், வைத்தியர் தெரிவித்தார். 

கம்பஹா, பெபிலியவெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரே இக்குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

வைத்தியசாலையின் துணை இயக்குநர் டாக்டர் புஷ்பா கமலாட்ஜ், இது தாயின் முதல் கர்ப்பம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் இயல்பை விட சற்றே குறைந்த எடை கொண்டவர்கள். அவர்கள் வைத்தியசாலையில் குழந்தை பிரிவில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad