கடல் வழியாக 5 கிலோ 500 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

கடல் வழியாக 5 கிலோ 500 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 6 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முயன்றபோது சந்தேகநபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

மாதகலைச் சேர்ந்த குறித்த இருவரும் தரகுப்பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறை கடற்படையினரால் சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட 5 கிலோ 500 கிராம் தங்கம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

(யாழ்.விசேடநிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad