பேஸ்புக் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 28 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

பேஸ்புக் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 28 பேர் கைது

பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் போதைப் பொருள்  வைத்திருந்த 20 பேர் கைது - News View
அக்மீமன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில், பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 02 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு (29) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர்கள் மாத்தளை, அநுராதபுரம், மொரட்டுவை, அம்பாறை, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்களை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad