சீனாவில் உணவு விடுதி இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி, 28 பேர் படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

சீனாவில் உணவு விடுதி இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி, 28 பேர் படுகாயம்

சீனா: உணவக விடுதி இடிந்து விழுந்து விபத்து - 17 பேர் பலி
சீனாவில் 2 மாடியை கொண்ட உணவக விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் ஷன்ஜி மாகாணம் லின்ஃபென் நகரில் உணவக விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. 2 மாடிகளை கொண்ட அந்த உணவகம் நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 28 பேர் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், இந்த கட்டிட விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad