பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலராக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலராக உயர்வு

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

உலகளவில் பேஸ்புக் முன்னணி சமூக இணையத்தளமாக திகழ்ந்து வருகிறது. அண்மையில் பேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6.5 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், உரிமையாளர்களில் ஒருவரும், 13 சதவீத பங்குகள் வைத்துள்ள மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் பேஸ்புக் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பில் இந்திய மதிப்பில் ரூபா. 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகின் அதி பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்க்கு அடுத்தபடியாக மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார். 

இதன்படி அமெரிக்க டொலர் மதிப்பில் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment