ராஜித சேனாரத்ன, ரூமி மொஹமட்டிற்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் - ஏனைய இருவரையும் சாட்சிகளாக அறிவித்து விடுவிக்க உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Friday, July 31, 2020

ராஜித சேனாரத்ன, ரூமி மொஹமட்டிற்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் - ஏனைய இருவரையும் சாட்சிகளாக அறிவித்து விடுவிக்க உத்தரவு

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டிற்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில், ஏனைய இரு சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

குறித்த இருவரும் வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச தரப்பு சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad