அனுராதபுரம் மாவட்டம் வாழ் முஸ்லிம்கள் வரலாற்றுத்தவரினை இழைக்க மாட்டார்கள் - முன்னாள் பாராளுமன்ற உறுபப்பினர் இஷாக் ரஹுமான் - News View

Breaking

Post Top Ad

Friday, July 31, 2020

அனுராதபுரம் மாவட்டம் வாழ் முஸ்லிம்கள் வரலாற்றுத்தவரினை இழைக்க மாட்டார்கள் - முன்னாள் பாராளுமன்ற உறுபப்பினர் இஷாக் ரஹுமான்

ஆடைகளுக்கு நடுவில் கை வைத்து ...
பல தியாகங்களுக்கு மத்தியில் பெற்றெடுத்த அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமையினை இம்மாவட்ட முஸ்லிம்கள் தக்க வைத்துக்கொள்வார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் விட்ட வரலாற்று தவறினை இந்த தேர்தலிலும் இழைக்கமாட்டார்கள் என்று தான் நம்புவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட வேட்பாளருமான இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.


நாச்சியாதீவு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனுராதபுர மாவட்டத்தில் பிரதேச சபைகளுக்கும் மாகாண சபைக்கும் மாத்திரமே முஸ்லிமொருவர் செல்ல முடியும் என்ற பேரினவாதிகளின் கருத்து தோற்கடிக்கப்பட்டு, துப்பாக்கி ரவைகளுக்கு மூன்று தலைமைகளை பலி கொடுத்து ஈன்றெடுத்த முஸ்லிம் பாராளுமன்ற தலைமைத்துவத்தை தக்க வைத்துக்கொள்வது அனுராதபுர முஸ்லிம்களின் தலையாயக்கடமையாகும் என்பதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.

2015 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் கலைக்கப்படும் அந்த பொழுதுவரை சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அமைச்சர்களால் கூட முன்னெடுக்க முடியாமல்போன பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன். கல்வி, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம் என சகலதுறைகளிலும் இன, மத பேதமின்றி மக்களுக்காக சேவையாற்றியிருந்தேன்.

எமது சமூகத்திற்கான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்கே கடந்த காலங்களில் எமக்கு ஒரு பாராளுமன்ற உறுப்புரிமை தேவைப்பட்டது. இம்முறை எமது வாக்கினை எமது உரிமைகளை காப்பாற்றிக்கொள்வதற்கும், இந்த நாட்டில் எமது மக்களின் இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் நமது வாக்கை பாவிக்க வேண்டிய ஓர் கட்டாயத்திற்கு தல்லப்பட்டுள்ளோம் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டில் பேரின மக்கள் மத்தியில் கௌரவமானவர்களாகவும், தேசபக்தர்களாகவும் திகழ்ந்த முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் பெயர்தாங்கிய விஷமிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளினால் தலைகுனிந்து நிற்கவேண்டிய ஓர் அவல நிலை ஏற்பட்டது. நாடெங்கும் இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அனேகமான இடங்களில் முஸ்லிம்களது சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்ட நிலையிலும் கூட அனுராதபுர மாவட்டத்திலே முஸ்லிம் மக்களுக்கு எதிராக எந்தவித இனவாத செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்பதை இம்மாவட்ட முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். கடந்த ஆட்சிக்காலத்தைப்போன்று இனவாத சக்திகளிடமிருந்து அனுராதபுரவாழ் முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை தொடர்ந்தும் மேற்கொள்வேன் என்பதை உறுதிபட கூறுகிறேன்.

அனுராதபுர வாழ் பெரும்பான்மை சமூகத்தோடும், உயர் மட்ட பௌத்த பிக்குகளோடும் நான் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பினால் முஸ்லிம் சமுதாயத்தை பற்றிய ஓர் சிறந்த என்னத்தை அவர்கள் மத்தியில் உருவாக்கினேன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் என் வெற்றியின் பங்காளர்களாக விளங்கிய மக்களின் வாக்குகளினாலேயே என்னாள் இவ்வாறான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. இந்த பயனத்தில் தொடர் பங்காளியாக இம்மாவட்ட வாழ் முஸ்லிம்கள் திகழ்வார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை என தெரிவித்தார்.

ஐ.எம்.மிதுன் கான்
கனேவல்பொல

No comments:

Post a Comment

Post Bottom Ad