53 வயது மனைவி கொலை - 39 வயது கணவன் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

53 வயது மனைவி கொலை - 39 வயது கணவன் கைது

கணவனை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை ...
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டோசன் வீதியில், 31ஆவது தோட்டப் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (28) 10.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவரினால் அவரது மனைவி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கொலையை புரிந்ததாக கூறப்படும் 39 வயதுடைய கணவர், கொம்பனித் தெரு பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு-02 ஐ சேர்ந்த 53 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (29) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad