களுத்துறை நகர சபைத் தலைவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, June 29, 2020

களுத்துறை நகர சபைத் தலைவர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் களுத்துறை நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (29) களுத்துறை தெற்கு பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி, களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுத்துறை வேணன் பெனாண்டோ விளையாட்டு மைதானத்தின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு, உள்நுழைந்தமை தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரிடம், மைதானத்தின் முகாமையாளரினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதற்கமைய, கடந்த 26ஆம் திகதி களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட இருவர், களுத்துறை தெற்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad