நாட்டை ஒரு இனத்தவருக்கு மாத்திரம் சொந்தமாக்கும் வேலைத் திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள் - ஸ்ரீ காந்தா - News View

Breaking

Post Top Ad

Monday, June 29, 2020

நாட்டை ஒரு இனத்தவருக்கு மாத்திரம் சொந்தமாக்கும் வேலைத் திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள் - ஸ்ரீ காந்தா

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, நாட்டை ஒரு இனத்தவருக்கு மாத்திரம் சொந்தமாக்கும் வேலைத் திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக் கடசியின் தலைவர் ஸ்ரீ காந்தா தெரிவித்தார். 

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள நேத்ரா உல்லாச விடுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கி இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

மீன் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சி இம்முறை கூட்டமைப்பிற்கு சவாலாகவே உருவாகி உள்ளது. இத்தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானதாகும்.

முப்பது வருடங்களாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழர்கள் இம்முறையாவது தீர்வுகளைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்கள் தீர்வுக்கு பதிலாக தேசத்தையே ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமாக மாற்றுவதற்கு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை, நியாயமான தீர்வு ஒன்றையே வேண்டி நிற்கிறோம். 

தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த ஒரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ளவில்லை. இம்முறை தேர்தல் இனப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைதல் வேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு. ஆனால் தமிம் கூட்டமைப்போ முட்டுக் கொடுக்கும் வேலைத் திட்டம் பற்றியே பேசி வருகிறது.

ரணில் தரப்பு அரசுக்கு முட்டுக்கு கொடுத்தனர். எதிர்க் கட்சியாக இருந்து எதையும் சாதிக்காது மாயாஜாலம் காட்டினர். எனவே இவர்களுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad