வடக்கில் ஒரு இராணுவ சிப்பாயை கூட விக்னேஸ்வரனால் வெளியேற்ற முடியவில்லை - தவராசா - News View

Breaking

Post Top Ad

Saturday, June 27, 2020

வடக்கில் ஒரு இராணுவ சிப்பாயை கூட விக்னேஸ்வரனால் வெளியேற்ற முடியவில்லை - தவராசா

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை காண்பேன் எனக் கூறி மாகாண சபையை ஆட்சி செய்த சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிரேமானந்தா சுவாமியை விடுதலை செய்ய வலியுறுத்தியதை தவிர எதனையும் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.தவராசா இன்னும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா மக்களிடம் வாக்கு கேட்கின்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபை தேர்தலின்போது தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவோம் என முழக்கம் இட்டனர். ஆனால் ஒரு இராணுவ சிப்பாயை கூட அவரால் வெளியேற்ற முடியவில்லை. 

இவர்கள் இதனை தான் செய்யவில்லை என்று பார்த்தால் வடக்கு மாகாண சபைக்கு யூ.என்.டி..பி யால் கிடைத்த பெருமளவான அபிவிருத்தி நிதியை குறித்த திட்டத்திற்கு தனது உறவினரை நியமிக்கவில்லை என்பதற்காக அந்த நிதியை திருப்பி அனுப்பிய அரசியல்வாதி தான் இவர்.

மாகாண சபையினை ஆட்சி செய்த போது மக்களுக்கு எதனையும் செய்யாத இவர் இலங்கைக்கு முதல் தடவையாக பாரத பிரதமர் மோடி வருகைதந்த போது தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி எவையும் பேசாது இந்தியாவில் பல பெண்களை சாமியார் என்ற போர்வையில் கற்பழிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா என்ற சாமியாரை விடுவிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

வடக்கு மகளுக்கு பல ஆண்டுகளாக எவளவோ பிரச்சனைகள் இருக்க கற்பழிப்பு சாமியாரை விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு கடிதம் கொடுத்தார்.இதுதான் மாகாண சபையில் ஆட்சியில் இருக்கும் போது ஆற்றிய பணி.வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீனக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றார் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad