முகக் கவசம் அணியாதவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் - பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை ! - News View

Breaking

Post Top Ad

Saturday, June 27, 2020

முகக் கவசம் அணியாதவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் - பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பல சுகாதார நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக் கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளைமுதல் முகக் கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம், பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, உரிய சுகாதார முறைமைகளை கையாளாத அனைவரையும், நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை மீறியதாக அச்சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம், 3 ஆம் கட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. இந்நிலையில், கட்டம் கட்டமாக நாடு வழமைக்கு திரும்பிவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad