மணல் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஆற்றில் மாயம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

மணல் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஆற்றில் மாயம்

திருகோணமலை, கிண்ணியா சோலைவெட்டுவான் பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

ஆற்றோரத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த இளைஞர், மோட்டார் சைக்கிளில் நீர் எடுக்க வந்தவர்களைக் கண்டு பொலிஸார் வருவதாக எண்ணி ஆற்றில் பாய்ந்துள்ளார். இதன்போது அவர் நீரில் மூழ்கியுள்ளதாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்

கிண்ணியா, மதீனா நகரைச் சேர்ந்த யூனைதீன் பாஹிம் (21) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் மூழ்கிய இளைஞரை மீட்கும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad