உப பொலிஸ் நிலையம் மீது மரம் முறிவு - பொலிஸ் அதிகாரி காயம் - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

உப பொலிஸ் நிலையம் மீது மரம் முறிவு - பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (21) மாலை வீசிய பலத்த காற்றினால், கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள உப பொலிஸ் நிலையம் மீது பாரிய மா மரம் முறிந்து விழுந்ததில், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேபோன்று வீட்டுக் கூரையின் மேல் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் ஓடுகள், வீட்டில் போடப்பட்டிருந்த மரங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

அக்கராயன் பகுதியில் துரதிருஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

அத்தோடு, வட்டக்கச்சி இராமநாதபுரம் உப பொலிஸ் நிலையம் மீது மா மரம் முறிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தமையால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

(கிளிநொச்சி  -முருகையா தமிழ்செல்வன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad