முஸ்லிம் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்குங்கள் : காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் !! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

முஸ்லிம் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்குங்கள் : காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் !!

நூருள் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையில் இன்று (19) தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் கூடிய காரைதீவு பிரதேச சபை அமர்வின் போது முஸ்லிங்களின் மத உரிமையை பெற்றுக் கொள்ள கொவிட் 19 தோற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை முன்வைக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபை அமர்வில் தீர்மானமாக நிறைவேற்றி நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ் தெரிவித்தார்.

அத்தீர்மாண பிரேரணையில் கொவிற் -19 தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்காக சகல உறுப்பினர்களும் ஒப்பமிட்டு குறித்த மகஜரை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தவிசாளர் கி. ஜெயசிறில் உட்பட சகல உறுப்பினர்களும் முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையம் அம்பாறை கிளை சார்பாக பெறப்படும் ஒரு லட்சம் கையெழுத்து வேட்டைக்கு ஆதரவாக ஒப்பமிட்டனர் என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad