தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 1ந் திகதி முதல் பிரதமர் பதவி வகித்து வருபவர் முகைதீன் யாசின் (வயது 73). சமீபத்தில் இவர் நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பிரதமர் முகைதீன் யாசின், தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அதேநேரத்தில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 

இந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிற அதிகாரிகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ளுமாறும், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad