முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுக்கு வாகரையில் தடை விதித்த பொலிஸார் - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுக்கு வாகரையில் தடை விதித்த பொலிஸார்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரைப் பிரதேசத்திற்கு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர்கள் பணிச்சன்கேனி பாலத்தில் வைத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுக்கு நீதிமன்றத் தடை உத்தரவை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தங்களுக்கு தெரிவித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஷ் கருத்து தொரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய நிகழ்வு தொடார்பாக செய்தி சேகாரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் வாகரைப் பொலிசாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad