மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் தொடரும் மனித நேய பணிகள்...! - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் தொடரும் மனித நேய பணிகள்...!

(றிஸ்கான் முகம்மட்)

அண்மைக் காலமாக அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மக்களின் குறை நிறைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் நேரடியாகச் சென்று கேட்டறிந்து வருகின்றார்.

அதில் குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மனோ கணேசனின் தலைமையிலும் நேரடி பங்குபற்றலுடன் இதுவரை 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொதிகாள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அமைப்பின் தலைவருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி மேற்கொண்டதுடன் களத்திலிருந்து மக்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்நிவாரண பணியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

மேன்மேலும் தங்களின் சமூகப்பணி தொடரும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad