சிகை அலங்கார நிலையங்களை சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு அனுமதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

சிகை அலங்கார நிலையங்களை சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு அனுமதி

COVID 19 தொற்றின் காரணமாக அரசாங்கத்தினால் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சிகை அலங்கார நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அமைவாகவும் சிகை அலங்கார துறைக்கான சட்ட கட்டமைப்பு சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்படவுள்ளன.

இந்த சட்ட கட்டமைப்பு உள்ளடக்கிய வழிகாட்டிக்காக நடைமுறை பிரச்சினைகளை அறிந்து கொண்டு புதிய விடயங்களை உள்ளடக்கும் நோக்கத்தைக் கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் திருமதி பவித்ரா தேவி வன்னியாராச்சி தலமையிலும் சிகையலங்கார துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் நேற்றையதினம் (4) மாலை சுகாதார அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது சுகாதார அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சிகை அலங்காரத் துறைக்கான சட்டங்களை வகுப்பது வேறு எந்த நிறுவனமும் அல்ல என்றும் இதனை சுகாதர அமைச்சினால் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோன்று நாளாந்த சேவைகளை வழங்கும் பொழுது சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்ட சிகை அலங்காரம் உள்ளிட்ட சேவை இடங்கலாக அத்தியாவசிய சேவையை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதற்காக உரிய இடவசதி ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு முறையை சரியான முறையில் கடைபிடித்து சேவையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதேபோன்று சிகை அலங்கார சேவை முறையாக முன்னெடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய வழிகாட்டியொன்றை சமர்ப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக இந்த நடவடிக்கை கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் சிகை அலங்காரத்துறையின் முக்கியஸ்தரகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களது கோரிக்கை சிகை அலங்கார நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதாகும். இவர்களது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு இந்த நிலையங்களை திறப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை பாரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் உலகில் பல நாடுகளில் பரவியுள்ள இந்த தொற்று நோயை இலங்கையில் கட்டுப்பதக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு குறித்து சிந்தித்து மிகப் பொறுப்புடன் சேவை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். விசேடமாக சமூக இடைவெளியை முன்னெடுத்து சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து உங்கள் நிறவனங்களுக்கு வரும் நபர்களுக்கு சேவையை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்த முன்னோடிகளினால் COVID 19 காரணமாக சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த போதிலும் பெரும்பாலான நிலையங்களின் நடவடிக்கைகள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்வதற்கு செயல்படுவதாக தெரிவித்தனர் இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்று சுட்டிக்காட்டினர்.

தற்பொழுது A,B,C ஆகிய சிகையலங்காரத் துறை தரத்திற்கு அமைவாக இத்துறையில் சுமார் 2 இலட்சம் பேர் வாழ்வாதாரத்திற்காக தங்கியுள்ளனர். இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து தமது சேவையை முன்னெடுப்பதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்ததைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமது நன்றியை சுகாதார அமைச்சுக்குத் தெரிவிப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் எல்.ரி.கம்லத், சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார அலகின் பணிப்பாளலர் வைத்தியர் திலக் சிறிவர்தன, சிகை மற்றும் சிகை அலங்கார தொடர்பான இலங்கை நிறுவனங்களின் தலைவர் திருமதி கருணாரத்ன அதன் அங்கத்தவர்களான திருமதி ரமணி பெர்னாண்டோ , முன்னணி சிகை அலங்கார கலைஞர்களான ரம்சி ரஹ்மான், ரோஹான் பீரிஸ், சஞ்சீவ குமார பெரும உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment

Post Bottom Ad