செம்மணியிலும் திருப்பி அனுப்பப்பட்டார் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கி - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

செம்மணியிலும் திருப்பி அனுப்பப்பட்டார் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கி

சங்குப்பிட்டியில் இருந்து யாழ். நோக்கி திருப்பி அனுப்பப்பட்ட வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினார் செம்மணியில் அஞ்சலிக்காக சென்ற சமயம் அங்கும் அவர்களுக்கு தடை தடையேற்பட்டுள்ளது. 

இந்நிலையில் யாழ்.செம்மணிப் பகுதியில் அஞ்செலி செலத்துவதற்காக முற்பட்டபோது அவர்களை பின்தொடர்ந்த பொலிஸார் அங்கும் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது திருப்பி அனுப்பியுள்ளனர். 

நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவு நாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். 
இவ்வாறு சென்றுகொண்டிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டனர். 

விக்கினேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்து பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்க வைக்கப்பட்ட பின்னர், அவர்களை மீண்டும் யாழ் நோக்கி திருப்பினுப்பியுள்ளனர். 

இவ்வாறு திரும்பி யாழ். நோக்கி செல்லும் போது அவர்கள் செம்மணிப் பகுதியில் அச்சலி செலுத்தும் முகமாக வாகனத்தை நிறுத்திய போது அங்கும் அவர்களுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad