கலாநிதி ஷுக்ரி அவர்களின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்க்கு பெரிய இழப்பாகும் : எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் ! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

கலாநிதி ஷுக்ரி அவர்களின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்க்கு பெரிய இழப்பாகும் : எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் !

ஜாமியா நளீமியா அரபு கலாசாலையின் பணிப்பாளர் கலாநிதி ஷுக்ரி அவர்கள் காலமானார் (இன்னாஹ்லில்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிஊன்) எனும் செய்தி என்னை வந்தடைந்தவுடன் மிகவும் கவலையடைந்தேன்.

இலங்கையில் தற்காலத்தில் வாழ்ந்த சிறந்த கல்விமான்களில் முக்கிய ஒருவரான இவர் இலங்கை முஸ்லிம்களுக்கு அதிக உலமாக்களை உருவாக்கி மார்க்க ரீதியாகவும் சமூக விடயங்களிலும் அளப்பெரும் தொண்டாற்றியதோடு அதிகமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் கல்விமான்களையும் உருவாக்கி முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஆளுமையாவார்.

புனிதமிகு ரமழானின் இறுதிப்பத்தில் நிகழ்ந்த இந்த அறிஞரின் இழப்பு முழு முஸ்லிம்களுக்கும் பாரிய துயரை ஏற்படுத்தியுள்ளதோடு ஈடு செய்யமுடியா இடைவெளியையும் ஏற்படுத்தியிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது.

அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வல்ல இறைவன் அளிக்கவேண்டும் என பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரது சமூக பணிகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை எல்லாம் வல்ல நாயன் வழங்கிட வேண்டும் எனவும் இரு கையேந்தி பிரார்த்திக்கிறேன்.

ஆமீன்.

சகோதரர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
பிரதித்தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad