மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, வெளிநாட்டிலுள்ள பெரும்பாலான மாணவர்களை அரசாங்கம் ஏற்கனவே அழைத்து வந்துள்ளது. 

முன்னுரிமை பட்டியலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடுத்த கட்டமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்று (06) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த எடுக்கப்பட்டதாக, இன்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய முதலில் குவைத், துபாய், மாலைதீவு ஆகிய நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கையர்களை, வாய்ப்புகளின் அடிப்படையில் இங்கு அழைத்து வரந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment