தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் - மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் - மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்த வாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். ஆனால் தற்போது பெட்டிப்பாம்புபோல் அடங்கியுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

பிரதமரை சந்தித்த பின்னர் சுமந்திரன் இவ்வாறு அடங்கியிருப்பதன் காரணம் என்ன? இதன் பின்னணியில் ´மெகா டீல்´ இருக்கிறதா என மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும் கலந்துரையாடவே பிரதமரை சந்தித்ததாக கூட்டமைப்பு கூறிவருகின்றது.

நல்லாட்சியின்போது கூட்டமைப்பு வசமே எதிர்க்கட்சி பதவி இருந்தது. ரணிலை வழிநடத்தும் வல்லமையும் இருந்தது. எனவே, அந்த காலகட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை, அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை?

கடந்த ஆட்சியின்போது கூட்டமைப்பு சுகபோகம் அனுபவித்தது. இனிவரும் ஆட்சியிலும் அத்தகையதொரு சுகபோகத்தை அனுபவிக்கவா முயற்சி எடுக்கப்படுகின்றது?

அதேபோல் மலையகத்திலுள்ள அரசியல்வாதிகளும் சுயநல அரசியல் நடத்துகின்றனர். 1000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவித்தனர். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. 5000 ரூபா கொடுப்பனவிலும் தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. ஏனையோர் அடித்து விரட்டப்படுகின்றனர்." - என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad