லண்டனிலிருந்து வந்த விசேட விமானம் கட்டுநாயக்காவை வந்தடைந்தது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

லண்டனிலிருந்து வந்த விசேட விமானம் கட்டுநாயக்காவை வந்தடைந்தது

லண்டன் நகரிலிருந்து வர முடியாமல் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 194 பேரை அழைத்துக் கொண்டு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான மற்றுமொரு விசேட விமானம், இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 504 எனும் விசேட விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று அதிகாலை 3.05 மணிக்கு வந்தடைந்துள்ளது.

கனடாவிலும் அமெரிக்காவிலும் சிக்கித் தவிர்த்த இலங்கையர் குழு, லண்டனுக்கு வருகை தந்து இவ்விமானத்தின் மூலம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவ்விமானத்தின் வணிக வகுப்பில் 18 பேரும், சாதாரண வகுப்பில் 176 பேருமாக பயணித்துள்ளனர்.

இவர்கள் விமான நிலைய கட்டட வளாகத்திற்குள் நுழைய முன்னர் இலங்கை இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டனர். இதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக இலங்கை இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad