ஒன்பது பன்றிகள், வாகனத்துடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

ஒன்பது பன்றிகள், வாகனத்துடன் ஒருவர் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட பன்றிகள், ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேக நபரும் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து பொலனறுவைப் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட ஒன்பது பன்றிகள் மற்றும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக பன்றிகள் ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயற்பாடுகளை பிடிப்பதற்கு பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad