உலகம் முழுவதும் 37 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

உலகம் முழுவதும் 37 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை 55 ஆயிரத்தை கடந்தது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 37 லட்சத்து 55 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 22 லட்சத்து 38 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 79 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த விவரம்:-

அமெரிக்கா - 12,38,463
ஸ்பெயின் - 2,53,682
இத்தாலி - 2,13,013
இங்கிலாந்து - 1,94,990
பிரான்ஸ் - 1,70,551
ஜெர்மனி - 1,67,007
ரஷியா - 1,65,929
துருக்கி - 1,29,491
பிரேசில் - 1,16,299
ஈரான் - 1,01,650
சீனா - 82,883
கனடா - 62,046
பெரு - 51,189
பெல்ஜியம் - 50,781
இந்தியா - 49,391
நெதர்லாந்து - 41,319
சவுதி அரேபியா - 31,938
ஈக்வடார் - 31,881
சுவிட்சர்லாந்து - 30,060
போர்ச்சீகல் - 26,182
மெக்சிகோ - 26,025

No comments:

Post a Comment