30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. 

ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து வைரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் 2 லட்சத்து 1 ஆயிரத்து 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 649 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் அமெரிக்காவுக்கு (72,865 பேர்) அடுத்த படியாக வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து இண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad