ராஜகிரிய - பண்டாரநாயக்கபுரவில் 29 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

ராஜகிரிய - பண்டாரநாயக்கபுரவில் 29 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்

ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதான குறித்த நபர் போதைக்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய, அவருடன் தொடர்புபட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிசார் தெரிவித்தனர். அதற்கமைய, இப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad