ஸ்பெயினில் 2 மாதத்திற்குப் பிறகு 100-க்கு கீழே பதிவான கொரோனா பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

ஸ்பெயினில் 2 மாதத்திற்குப் பிறகு 100-க்கு கீழே பதிவான கொரோனா பலி

கொரோனா உச்சத்தில் இருக்கும்போது தினந்தோறும் 900-க்கும் மேற்பட்டோர் பலியாகி வந்த நிலையில், இரண்டு மாதத்திற்குப் பிறகு ஸ்பெயினில் பலி 100-க்கு கீழே பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடித்தபடியாக ஸ்பெயினில் கொரோனா வைரஸ் மையம் கொண்டது. கொரோனாவின் உச்சக்கட்ட தாக்கத்தின்போது தினந்தோறும் 900-க்கும் மேற்பட்டோர் பலியாகி வந்த சோக நிலை ஏற்பட்டது.

ஸ்பெயின் அரசின் கடுமையான முயற்சிக்குப்பின் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16ம் திகதியில் இருந்து பலியானோர் எண்ணிக்கை வேகமெடுக்க ஆரம்பித்தது. தினந்தோறும் 100-க்கு மேற்பட்டோர் பலியாகி வந்தனர்.

இந்நிலையில் சுமார் இரண்டு மாதத்திற்குப் பிறகு நேற்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 100-க்கும் கீழே சரிந்துள்ளது. நேற்று 87 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

4.7 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயின் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,77,719 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27,650 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி வருகிறது. ஆனால் பொருளாதார அடிப்படையில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad