டுபாயிலிருந்து 197 பேருடன் வந்த விசேட விமானம் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

டுபாயிலிருந்து 197 பேருடன் வந்த விசேட விமானம் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல் நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் டுபாயில் சிக்கித்தவித்த 197 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யு.எல். 226 என்ற விசேட விமானம் மூலம் குறித்த 197 பேரும் அழைத்து வரைப்பட்டுள்ளனர். 

இன்று காலை 6.20 மணியளவில் குறித்த விமானம் 197 பேருடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

விமானப்படையினர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து கிருமித் தொற்று நீங்கம் செய்துள்ளனர். 

இதன் பின்னர் குறித்த 197 பேரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக இலங்கை இராணுவம் பொறுப்பேற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad