100 ரூபாவுக்கு ரின் மீன் வாங்க முடியும் - போதுமான கையிருப்பு உள்ளது என்கிறார் கிளிநொச்சி அரச அதிபர் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

100 ரூபாவுக்கு ரின் மீன் வாங்க முடியும் - போதுமான கையிருப்பு உள்ளது என்கிறார் கிளிநொச்சி அரச அதிபர்

ரின் மீன்களுக்கான மானியம் நீக்கப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் மானிய விலையில் ரின் மீன்களை விற்பனை செய்ய முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உணவு ஆணையாளரிடமிருந்து தலா 25.000 கிலோ சீனி, பருப்பு, ரின் மீன், 2500 கிலோ வெள்ளைப்பூடு ஆகியவை பெறப்பட்டு அவை பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக மக்களுக்கு நியாய விலையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இரண்டாவது தடவையாக உணவு ஆணையாளரிடமிருந்து குறித்த பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக பருப்பு 4500 கிலோ, 10 ஆயிரம் கிலோ சீனி, 20 ஆயிரம் ரின் மீன்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பருப்பு மற்றும் ரின் மீன்களுக்கான மானிய விலை அரசினால் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பொருட்களை மானிய விலையின் அடிப்படையில் நாம் கொள்வனவு செய்துள்ளோம். அதற்கமைவாக போக்குவரத்து செலவுகளுடன் அவற்றை தொடர்ச்சியாக கிளிநொச்சி மக்களுக்கு மானிய விலையிலேயே கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

பரந்தன் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad