காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் தீ - 08 கடைகள் சேதம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் தீ - 08 கடைகள் சேதம்

காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீரென தீ பரவியதன் காரணமாக, 08 கடைகள் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு (04) இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

காலி பொலிஸார், காலி நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பிரதேவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இத்தீ விபத்தின்போது, எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad